திருச்சி திருக்கோயில்களில் அமைச்சர் ஆய்வு,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு மற்றும் யானை பராமரிப்பு நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தபோது.
தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து கைப்பற்றி வருகிறோம் - இறை அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இறைவன் சொத்தை இறைவனுக்கே என்கிற அடிப்படையில் இதுவரை 180 ஏக்கர் கோவில் நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருக்கோவில்களில் அறங்காவலர் குழுவிற்கான சட்டதிட்ட விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது - அறங்காவலர் குழுவைக் கண்காணிக்க தற்போது தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோயில் இடங்களில் காலம்காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான பேச்சுக்கே இடமில்லை- இது குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
திருத்தணி,சமயபுரம் திருச்செந்தூர் உள்ளிட்ட ஆலயங்களில் 16ஆம் தேதி முதல் அனுதினமும் 5000ம் பேருக்கு அன்னதான திட்டம் முதல்வரால் துவங்கி வைக்கப்பட உள்ளது.
திருக்கோவில்களில் பணியாற்றும் பணியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர பணிகள் வழங்க வேண்டும் என்று முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்தார். என செய்தி அவரகளிடையே தெரிவித்தார்
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் யானை பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் செல்லமுடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், கழக பொறுப்பாளர்கள் அன்பழகன், வைரமணி, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வட்டக் கழக பிரதிநிதிகள் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்