அதிமுக சார்பாக கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு அளிக்கப்பட்டது

 அதிமுக சார்பாக கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு அளிக்கப்பட்டது 



தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி விரைவில் உள்ளாட்சி தேர்தல்  நடைபெற உள்ளதால் அனைத்து கட்சியினரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும்ஆலோசித்து வருகின்றனர் அதைத்தொடர்ந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்து வருகின்றனர்


இந்நிலையில் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் துறையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வார்டு எண் 13 இல் அதிமுக  கழக வேட்பாளர்களாக போட்டியிட அபிராமிசேகர்,பாஸ்கரன் ,முருகேசன், ராமச்சந்திரன், ஆகியோர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி,யிடம் விருப்ப மனு அளித்தனர்


இதுகுறித்து வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  மு.பரஞ்ஜோதி, கூறுகையில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்துள்ளனர் எங்கள் கழகத்தின் N கோட்பாடுகளை கடைபிடித்து பின்பற்றி அதன் வழிகாட்டுதலின்படி செயல்படக்கூடிய அதிமுக கழகத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கழகத் தலைவர்களின் ஆலோசனைப்படி கேட்டுஅதிமுக சார்பாக போட்டியிட உரிமை வழங்கப்படும் என கூறினார்



அருகில் முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி,ஒன்றிய செயலாளர் சேனைசெல்வம் ,வெங்கடேசன், உப்பிலியபுரம் செல்வராஜ். நகர செயலாளர் செக்கர் ஜெயராமன், மகளிர் அணி மைதிலி அன்பரசு ,மாவட்ட கழக நிர்வாகிகள் அறிவழகன் விஜய் ,வேம்புரங்கராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு முத்துக்குமார்,மற்றும் கழக நிர்வாகிகள்  உடன் இருந்தனர்..

Post a Comment

Previous Post Next Post

Contact Form