கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து விருதிற்கான காசோலைகள் ஆட்சியர்வழங்கினார்


தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும் மற்றும் பாதுகாக்கும் நோக்கில் கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் மன்றங்களின் வாயிலாக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு 2002-2003 ஆம் ஆண்டு முதல் வயது மற்றும் கலைப் புலமைக்கு ஏற்றவாறு விருதுகள் வழங்கிட அரசுஆணையிடப்பட்டுள்ளது.


கலை 2018-2019 ஆம் ஆண்டுகளுக்கு கலை விருதுகள் கலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சிராப்பள்ளி மாவட்டக்கலைமன்றத்தின் வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இயல்,இசை மற்றும் நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் ஐந்து கலைஞர்களுக்கு வயதுமற்றும் கலைப் புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்டஆட்சித் தலைவர் தலைமையில் தேர்வாளர்குழு 19.08.2021 அன்று கூட்டப்பட்டுகலை இளமணி விருதிற்கு பரதநாட்டியக் கலைஞர் பொ,அபிநயா என்பவரும், கலைவளர்மணி விருதிற்கு முகர்சங்கு கலைஞர் கி.சௌபாக்யலக்ஷ்மி என்பவரும் கலைச்சுடர்மணி விருதிற்கு சிலம்பக் கலைஞர் வீ.தங்கராஜ் எனபவரும், கலைநன்மணிவிருதிற்கு கிராமிய நடனக் கலைஞர் சகு.சத்யன் என்பரும்,கலைமுதுமணி விருதிற்கு தவில் கலைஞர் விஜி.முருகன், என்பரும் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு. அவர்கள் இன்று (13.09.2021) விருதுகள் வழங்கினார். இதில் கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து விருதிற்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது திருச்சிராப்பள்ளி மண்டலக் கலை பண்பாட்டுமைய உதவி இயக்குநர் மு.க.சுந்தர், உடனிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form