செப்டம்பர் 16 இன்று உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் வளாகத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் நாகலிங்கம் நாவல்பழம் ,கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரகன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு.ரத்தினகுமார் அவர்கள் காவல்நிலைய வளாகத்தில் உதவி ஆய்வாளர் திரு.நாகராஜ் தலைமை காவலர் ரீட்டாமேரி மற்றும் காவலர்கள் அக்சா,ராஜேஷ் உள்ளிட்டேருக்கும் மற்றும் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவலநிலையத்தின் வளாகத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் புஷ்பகணி , அவர்கள் தலைமை காவலர்கள் சத்தியவாணி,பிரதிபா மற்றும் காவலர் ராமதிலகம் ஆகியோருக்கும் மரகன்றுகள் வழங்கப்பட்டது
மேலும் காவல் நிலைய வளாகத்தில் மரகன்றுகளும் நடப்பட்டது இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகி ஆர்.ஏ.தாமஸ் அனிலா,ரோஷன், முத்து பாண்டி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்*