கடந்த 07.09.21 ம் தேதி திருச்சி மாவட்டம், புலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இலுப்பையூர் உள்ள காலி மனையில் வைத்து கண்ணியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கேமரா உதவியாளர் அபிராஜ் (26) தபெ.அர்ஜீனன் என்பவரை சினிமா படம் எடுக்க வேண்டும் என்று மோசடியாக சொல்லி சென்னையில் இருந்து சுமார் பத்துலட்சம் மதிப்புள்ள Sony கேமராவுடன் மேற்படி சம்பவ இடத்திற்கு வரவழைத்து எதிரிகள் தீபன், மற்றும் அவருடன் இருந்தவர்கள் கேமராவை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுசம்மந்தமாக வாதி கொடுத்த புகாரின்பேரில் புலிவலம் காவல் நிலைய குற்ற எண் 175/21 ச/H 294(b), 420, 392 இதச ன்படி 09.09.21 ம் தேதி வழக்குபதிவு செய்யப்பட்டுஉள்ளது.
இந்த வழக்கில் காவல் துறை தலைவர், மத்திய மண்டலம், துணை தலைவர்,திருச்சி சரகம், காவல் கண்காணிப்பாளர், திருச்சி மாவட்டம் அவர்களின்உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல் பிரிவு பொறுப்பு ஜீயபுரம் உட்கோட்டம் .முத்தரசு, அவர்கள் மேற்பார்வையில் புலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாந்தகுமார், தலைமையில் காவலர் 1453, செந்தில்குமார், காவலர் 1014 நல்லதம்பி, ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்ட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 1)முஸ்தபா, (31) த/பெ.ஜஹாங்கீர், 76/35, கல்நாயக்கன் தெரு, உறையூர், திருச்சி மாநகரம். 2)ஏழுமலை, (48) த/பெ.தண்டபானி, உளுந்தூர் பேட்டை, கள்ளகுறிச்சி மாவட்டம். 3)ஜெயராம், (31) த/பெ.நித்தியாநந்தன், சையன், கோலிவாடா, மும்பை ஆகியோர்களை இன்று 15.09.21 ம் தேதி கைது செய்து கொள்ளையடித்து சென்ற ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள சோனி கேமரா மற்றும் லென்சுகளை கைப்பற்றி எதிரிகள் மூன்று பேருடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.