தமிழக முதலமைச்சர் கோப்பை திருச்சி மாநகர காவல் நிலையத்திற்க்கு கிடைத்தது

 தமிழ்நாடு காவல்துறையில் மாநகர / மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் காவல்நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் அந்த காவல் நிலையங்களில் பதிவான வழக்குளின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறந்த காவல் நிலையத்திற்கான தமிழக முதலமைச்சர் கோப்பை வழங்கப்பட்டு வருகிறது.


 தற்போது 2019-ஆம் ஆண்டில் சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழக முதலமைச்சர் கோப்பை காவல் நிலையங்கள் பெற்றமதிப்பெண் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாநகர கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 16-வது இடத்தை பெற்றுள்ளது. கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் கோப்பையை திருச்சிமாநகரகாவல் ஆணையர் 16.09.2021) நேற்றுஆய்வாளர் சண்முகவேலிடம் கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்தநிகழ்ச்சியில் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துணை ஆணையர் சக்திவேல், கோட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆணையர் சுப்பிரமணியன்,கோட்டை காவல் ஆய்வாளர் .தயாளன், ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form