அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட ஒன்றிய, பகுதி,நகர,பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் கூட்டம்24.07.2021, இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
இதில் அஇஅதிமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி, தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீட்தேர்வு ரத்து, கட்டுமானப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்துவது, பெட்ரோல் விலை ரூ.5/-ம்,டீசல் விலை ரூ.4/-ம் குறைப்பது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100/-மானியம் தருவது, தடையில்லா மின்சாரம் வழங்குவது,
குடும்பத்தலைவிக்குமாதம் ரூ.1000/- வழங்குவது, காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவது போன்ற தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை உடனடியாக தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும்
என்றும், தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவிசாய்க்கச் செய்யவும். தலைமை கழகம் அறிவித்தவாறு
வருகின்ற 28.07.2021 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் ஊர்அனைவரும் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏற்றி கவன ஈர்ப்புமுழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமை குரல்களாய் ஒலிக்க செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது
இக் கூட்டத்தில் அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி,சிவபதி, மற்றும் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் அணி அனைவரும் கலந்து கொண்டனர்