திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
24.07.2021, இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் அன்பு பிரபாகரன், தலைமையில்நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி, சிறப்புரையாற்றினார்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானது நீட் தேர்வு ரத்து, ஒவ்வொருகுடும்பத்திற்கும் குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலைசெய்யப்படுவார்கள் போன்ற வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி
ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க. அரசு, தேர்தலில் மக்களுக்கு அளித்தவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அ.இ.அ.தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தகவல்தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசின் அராஜக போக்கை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
காவல்துறையால் பொய்வழக்கு போடப்படும் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்களுக்கு சட்டரீதியாக உதவும் பொருட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பொய்யான வழக்கு போடப்பட்டுள்ள கழக நிர்வாகிகளுக்கு சட்ட உதவி செய்வதற்கு வழக்கறிஞர்கள் குழு அமைப்பது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் கழக வழக்கறிஞர்கள் அணி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்குசிறப்பாக தேர்தல் பணியாற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
கழகத்தை எழுச்சியோடு வழிநடத்தும் இருபெரும் தலைவர்கள், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார், எதிர்கட்சி துணைத்தலைவர், கழக ஒருங்கிணைப்பாளர் O.P.S ஆகிய இரு தலைவர்களின் வழிகாட்டுதல், ஆலோசனைப்படி கழக வழக்கறிஞர்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறோம்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இதில் அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல்,
முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி,கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் அணி அனைவரும் கலந்து கொண்டனர்