திருவெறும்பூர் தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் திட்டங்கள் தொடக்க விழா
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
திருவெறும்பூர் குவளக்குடி ஊராட்சி களமலைப்பகுதியில் 15,50000 மதிப்பில் நடுநிலைப் பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் கட்டி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் 2019 2020 ஆம் ஆண்டு நிதி ஆண்டின் கீழ் நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த பகுதி மக்கள் என்னிடம் எங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்ற கோரிக்கையை தான் முதலில் வைத்தார்கள் அன்று எதிர்க்கட்சித் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் அதை நான் நிறைவேற்றினேன்
தற்பொழுது தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நான் இந்த பள்ளியை திறந்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
மேலும் இங்குள்ள சாலை குண்டும் குழியுமாக கடந்த இருபது ஆண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் போடப்படாத இந்த சாலையை நிச்சயமாக போடுவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்க்கு உத்தரவிட்டுள்ளதாகவும்
மேலும் முதல்வரின் ஆணைக்கிணங்க குடிநீர் பிரச்சினை மற்றும் குறிப்பிட்ட காலத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் அனைத்துக்கும் முழுமையாகத் தீர்வு காணப்படும் எனபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எடுத்துரைத்தார்