திருச்சி பொன்மலைபட்டியில்ல் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் சிஏசிஎல் தனியார் அமைப்பினர் சார்பில் மனித கடத்தலை தடுப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் காமராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை வெளியீட்டார்.
பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிரேசி தமிழ்ச்செல்வி, மனித கடத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசினார்
இந்நிகழ்வில் சிஏசிஎல் அமைப்பின் மண்டல அமைப்பாளர் மருதநாயகம் , மாவட்ட அமைப்பாளர் சீதாலட்சுமி, வேர்ல்ட் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் அன்பழகன், மகேஸ்வரன், குணசேகரன் கலந்துகொண்டனர்
மேலும் குழந்தை உழைப்பு ஏதிர்ப்பு பிரச்சாரத்தின் சார்பாக கூறுகையில்நமது நாடு குடியரசாகி 71 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கொத்தடிமை முறை நிலவுகிறது என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். 1976 ஆம் ஆண்டு கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 3,13,000 கொத்தடிமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நமது அரசு தெரிவிக்கிறது.
ஆனால் தொண்டு நிறுவனங்களும், மக்கள் அமைப்புகளும் இது போல் பல மடங்கு கொத்தடிமை தொழிலாளர்கள்அடையாளம் காணப்பட்டதாக கூறுகின்றனர். கொத்தடிமைகளாக நடத்துவதற்கு மனிதர்கள் கடத்தப்படுகின்றனர். இவர்கள் உழைப்பு சுரண்டலுக்கும், பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். சமீபத்தில் பீகாரில் அரசு உதவி பெறும் இல்லங்கள் மீது நடவடிக்கை எடுத்து
அரசு ஊழியர் உட்பட 19 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆட்கடத்தலுக்கு உதவியர்கள் என்று நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7000 ஆயத்த ஆடைகள் மற்றும்நூற்பாலைகளில் ஆள் கடத்தல் இருப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம், அனைத்து நிறுவனங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டும்,
இது வரை எந்த ஆய்வும் நடக்கவில்லை. நூற்பாலைகளில் பணிபுரியும் இளம்பெண்களுக்கு சில ஆண்டுகள் ஒப்பந்த முடிவில் வருங்கால வைப்புநிதியை போல, மொத்தமாக ஒரு தொகையை வரதட்சணைக்காக கொடுப்பது இன்றும் வழக்கமாக உள்ளது.
இது ஒரு கொத்தடிமை முறைக்கு சமமானது தான்.இது வரை கடத்தப்பட்டு கொத்தடிமையாக இனம் காணப்பட்டதில் 43 சதவீதம் பேருக்கு மட்டும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக (விடுதலை சான்றிதழ்) தெரிய வருகிறது. அதிலும் 26சதவீதம் நபர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க நீதிபதிகளுக்கு அதிகாரம் இருந்தும் மாநில, மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழு (State and District Legal Service Authority) பாதிக்கப்பட்டஅனைவருக்கும் துணையாக நிற்பதில்லை என்று தெரிகின்றது.
தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 332 ஆட்கடத்தல் தடுப்பு பிரிவுகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. மேலும் இந்த அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளித்து, நிதி அளிக்கப்படுவதும் இல்லை.
கடத்தலை தடுக்க தேசிய செயல்திட்டம் எதுவும் இல்லை. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையில் அனைத்து அமைச்சரவைகளையும் இணைத்து நடைபெற வேண்டிய கூட்டங்கள், ஒரு முறை கூட நடைபெற வில்லை.
கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டப்படி, அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவை செயல்படவைப்பதேயில்லை கொத்தடிமையாக வைத்திருந்த நபர்கள் தண்டிக்கப்படுவதும் மிகவும் குறைவு.
எனவே ஆட்கடத்தலையும், கொத்தடிமை முறையும் இல்லாமல் செய்வதற்கு (1)ஆட்கடத்தலைகண்டறிதல் (2) விசாரணை செய்தல் (3) கொத்தடிமையை விடுவித்தல் (4) வழக்கு தொடர்வது(5) குற்றவியல் நடுவர் மன்றத்தில் இந்த குற்ற வழக்குகளை விசாரித்து தண்டனை தருதல் என்பதுடன், பாதிக்கப்பட்டவருக்கு விடுவிப்பு சான்றிதழ் வழங்குதல், உதவி தொகை வழங்குதல், மறுவாழ்வு பணிகளை வழங்குதல், வழக்கை விரைவாக நடத்தி இழப்பீடு வழங்குதல் ஆகிய அனைத்தும் முறையாக நடை பெறுவதற்கு, முழுமையான சட்டங்கள் ஏதும் இதுவரை இல்லை. ஆகவே தான் ஆட்கடத்தல்களும், கொத்தடிமை முறைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
10க்கும் மேற்பட்ட முறை இந்த மசோதா கொண்டு வரப்பட்டு, சட்டமாகமலே தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது. ஒருங்கிணைந்த சட்டம் இல்லாததால், ஆட்கடத்தலும், கொத்தடிமை முறையும் தொடர்ந்து இருந்து வருகிறது. இதை கவனத்தில் கொண்டு ஆட்கடத்தல் தடுப்பபு மசோதா 2021 நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு சமூக கருத்துக்களை கேட்கப்பட்டது அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள குழந்தை உரிமை அமைப்புகள் இணைந்து எங்களது கருத்துக்களை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்
மேலும் யுனிசெப் அமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் 4ல் ஒரு குழந்தைக்கு 18 வயது பூர்த்தி ஆகாமலேயே குழந்தை திருமணம் நடைபெறுகிறது. மேலும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் ஆவணங்களின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு மட்டும் 2260 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஜனவரி முதல் ஜூலை 2020 வரை மட்டும் 9453 குழந்தைகள் காணமல் போயுள்ளதாக தி.இந்து நாளிதழில் மே.21- 2021 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது ஆகவே குழந்தை தொழிலாளர் முறையும் குழந்தை திருமணமும், குழந்தை காணாமல் போவதும் குழந்தை கடத்தலாகும். எனவே, இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆட்கடத்தல் மசோதா 2021 பட்டியலிடப்பட்டு ள்ளது. இந்த விவாதத்தில் தாங்கள் பங்கேற்று, இந்த மசோதா சட்டமாக நிறைவேற தாங்கள் என்னவெல்லாம் செய்ய முடியமோ, அவற்றையெல்லாம் செய்து சட்டமாக வருவதற்கு ஆவன செய்ய வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறோம்
என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடிதம் கொடுத்துள்ளோம். இதன் மூலம்ஆட்கடத்தலுக்கும் கொத்தடிமை முறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கி, நமது குடியரசு இந்தியாவை கொண்டு செல்லலாம் என நம்புகிறோம். என்று கூறப்பட்து.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்