திருச்சி மாநகர காவல் ஆணையரகம் சார்பாக29.07.2021 தேதி ரூ.20,00,000/- மதிப்புள்ள குட்கா பறிமுதல், செய்யப்பட்டது
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று
29.07.2021-ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பென்சனர் காலனி மற்றும் எடத்தெருஆகிய இடங்களில் குடோன்களில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் பாலக்கரை காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி இடங்களில் சோதனை செய்தனர்.
அச்சோதனையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் இருபது இலட்சம் (ரூ.20,00,000/-) சந்தை மதிப்புள்ள 55 மூட்டைகளில் இருந்த சுமார் 1800 கிலோ (Hanz, Cool Lips, Chini Khini, Vimal, Pan Parag & RMD) தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது
இதில்:பூமிநாதன்,38/21, த.பெ.பூவானம், எண்.15, பாரதிபுரம், திருவரம்பூர், திருச்சி, 2) இளங்கோ, 38/21, த.பெ.குருசாமி,எண்.47, புதுத்தெரு, காஜாப்பேட்டை, பாலக்கரை, திருச்சி, 3) வடிவேல், 40/21, த.பெ.செல்வராஜ்,எண்26, இளங்கோ இல்லம், பென்சனர் தெரு, காஜாபேட்டை, பாலக்கரை, திருச்சி, 4) ஹரிஹரன்,த.பெ.குருசாமி, எண்.47, புதுத்தெரு, காஜாப்பேட்டை, பாலக்கரை, திருச்சி மற்றும் 5) பழனிகுமார்,35/21, த.பெ.பால்ராஜ், சீனிவாசா நகர், அரியமங்கலம், திருச்சி ஆகிய 5 நபர்களை கைது செய்து பாலக்கரை காவல் நிலைய குற்ற எண்.393/21 u/s 273, 338 IPC & 77 of JJ Act r/w 24(i) COTPA Act-ன்படிவழக்கு பதிவு செய்யப்பட்டது.
'
மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம்யிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்தி வந்த ஒரு TATA Ace நான்கு சக்கர வாகனம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூபாய் இருபது இலட்சம் (ரூ.20,00,000/-) சந்தை மதிப்புள்ள சுமார் 1800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 5 நபர்களையும் கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மேலும் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறையின் மூலம் எச்சரிக்கப்பட்டது