தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க கூட்டம்

 தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க கூட்டம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை


ஜூலை 31 /

திருச்சி.தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்கம் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கான கோவிட் 19 விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தமிழ்வழி சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி பெறுவதற்கான மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது


இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ஆ.இருதயம், தலைமை வகித்தார் சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்கம் மாநில தலைவர்: பிரடின், வரவேற்புரை யாற்றினார் சிறுபான்மை ஆசிரியர் சங்கம் மாநில செயலாளர்: பெஸ்கி. கருத்துரை வழங்கினார்

நிகழ்ச்சியில்தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் சங்கம் மாநில தலைவர்: அ.மு.ஹாஜி.முஸ்தபா கமால், மாநில பொதுச்செயலாளர்: செபாஸ்டின், ஓய்வு பெற்ற மாநில கெளரவ ஆலோசகர். சேசுராஜ், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 


கூட்டத்தில். 1991 முதல் தொடங்கப்பட்ட மற்றும் தரம் உயர்த்ப்பட்ட  தமிழ் வழி சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க முன்னாள் முதல்வர் கலைஞர் 26/02/2011 அன்று வெளியிட்ட ஆணை எண்: 184  மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும். அதைபோல் 1999ஆம் ஆண்டுமே. மாதம் வரை அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 331 கோடி ரூபாய்ச்செலவில் 11307 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 648. ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அனுமதி வழங்கி ஆணையிட்டார் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகும் தொடங்கப்பட்ட 


பள்ளிகளுக்குப் பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டிலேயே பரிசீலித்து தக்க முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் அதே ஆணையிலேயே சேர்த்து முதலமைச்சர் ஆணை வெளியிட்டார் ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் அதை சட்டமாக மாற்ப்படாமல் கிடப்பில் போடப்பட்டது எனேவே 26/02/2011ல் வெளியிடப்பட்ட அந்த ஆணையை தற்போது அமைந்துள்ள அரசு மீண்டும் நடைமுறைப்படுத்திடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்


 இக்கூட்டத்தில்: தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்கம் மாநில பொருளாளர் பெஞ்சமின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form