திருச்சி.ஸ்ரீரங்கம் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே. சேகர்பாபு, ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அமைச்சர் பிகே சேகர்பாபு, ஆய்வை மேற்கொள்வதற்கு வருகை தந்தார் அப்போது.
அரங்கனின் தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து கோசாலையை பார்வையிட்டுஅங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாடுகளை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் அப்பகுதியில் இருக்கும் நெல் கொட்டாரத்தைபார்வையிட்டார். தொடர்ந்து தன்வந்திரி சன்னதி தாயார் சன்னதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களுக்குபேட்டியளித்த அவர் கூறுகையில்
இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கடந்த பத்தாண்டில் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் உள்ள கோயில்களில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருந்ததால்குடமுழுக்கும், எந்த புனரமைப்புப் பணிகளும் திருக்கோவில்களில் நடைபெற்றவில்லை எனவும்,
கடந்த 2 மாதங்களில் திருக்கோயிலுக்கு நேரடியாக சென்று துறை சார்ந்த செயலாளர்,துறை சார்ந்த ஆணையாளர் மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை ஒன்று சேர்த்து தமிழகம் முழுவதும் பார்வையிட்டு குடமுழுக்கு,பராமரிப்பு பணிகளையும்விரிவுபடுத்தி அதற்க்கான ஏற்பாடுகளை செய்ய அறிவித்துள்ளேன்.
கடந்த 12 ஆண்டுகாலமாக திருக்கோயில் குடமுழுக்கு நடத்தாத கோயில்களில் எண்ணிக்கைகளை கண்டறிந்து விரைவில் குடமுழுக்கு நடத்தும் பணிகள் குறித்து ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
ஸ்ரீரங்கம் கோவில் உள்ள கோசாலையில் பாதுகாப்புடன் சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தி உள்ளேன். கோயில் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து அங்கு மேலும் ஒரு கோசாலையை ஏற்படுத்தி பராமரிக்கலாம் என்பதை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளேன்.
கடந்த ஆட்சியில் போகின்ற போக்கில் 2011 மற்றும் 2020ஆண்டு நிரந்தர பணி உத்தரவாதம் என தெரிவித்தார்கள்.
5ஆண்டுகள் தற்காலியமாக பணிபுரிந்த பணியாளர்களின் விபரம் பெற்று அதற்கானபணிகள்மேற்கொள்ளப்படும்.
பணிநிரந்தரம் செய்த பிறகு எந்த எந்த பணியிடங்களில் மற்றவர்கள் பணியமர்த்தும் பணிகள் செயல்படுத்தப்படும்.
அர்ச்சகர்கள், நாவிதர்கள் உள்ளிட்டஅனைத்து பணி இடங்கள் கண்டறியப்பட்டு பணியமர்த்தபடும்.சிலை மாயமான வழக்கில் உண்மை தன்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில் இடங்களில் கடைகள், . குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. குடியிருப்பவர்கள் உரிய மனு அளித்தால் வாடகைதாரராகஏற்றுக் கொள்ளப்படும்.
இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் அதற்கு உரிய பரிந்துரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஓய்வூதிய பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனடியாக ஓய்வு ஊதியம் அளிக்கப்படும்.
ஒய்ஊதிய உயர்வை முதல்வர் கவனதிற்க்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் கோவில் சார்ந்த உப கோயில்களில் தொல்லியல் துறை அனுமதி பெற்று அனைத்து கோயில்களிலும் விரைவில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, பகுதி செயலாளர் ராம்குமார்,ஒன்றிய செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.