பெண்கள் உதவி மையம் தொடக்க விழா

 திருச்சி மாநகர காவல் ஆணையரகம் வெயிட்ட செய்தி


பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பெண்கள் உதவி மையம் தொடக்க விழா நடைெற்றது


திருச்சி மாநகரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெண்களை மானபங்கம் படுத்துதல், பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பெண்களுக்குஎதிரான தொல்லைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுக்கும்


வகையில் திருச்சி மாநகரத்தில் செயல்படும் அனைத்து காவல் நிலையங்களில் பெண் காவல்அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களை கொண்டு “பெண்கள் உதவி மையம்” தொடக்க விழாஇன்று (09.07.2021) காலை கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.





இதில்.திருச்சி மாநகர காவல் ஆணையர் A.அருண், தலமையேற்று பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் பெண் காவல் ஆளிநர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பைஆரம்பித்து வைத்தார் 


இதில், பெண் உதவி மையத்திற்கான 24 மணி நேரம்செயல்படும்கட்டணம்இல்லா தொலைபேசி 112, 181 மற்றும் 1098 என்ற எண்களை அறிமுகப்படுத்தி வைத்தார் மேலும்,


இவ் உதவி மையத்தில் பெறப்படும் புகார்களை பாதிக்கப்பட்ட பெண்களின் இடத்திற்குநேரடியாகஉடனடியாக சென்று தேவையான உதவிகளை துரிதமாக செய்துமுடிக்க பெண்கள் உதவி மையத்திற்கு அரசால்


ஒதுக்கீடு செய்யப்பட்ட 16 இரண்டு சக்கர வாகனங்கள் (Honda Activa) மற்றும் 16 அதிநவீனதொழில்நுட்பங்கள் கூடிய மடி-கணினிகள் ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபட்டுள்ளபெண்காவல் ஆளிநர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் வழங்கினார், "

தற்போது காவல் துறையினர்மீது பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் நம்பிக்கைஅதிகரித்துவரும் காரணத்தினால், அவர்கள் காவல் நிலையங்களுக்கு நேரடியாக வந்து புகார் அளிக்கின்றனர். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும்வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்


இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகரகாவல்துணைஆணையர் (L&O). சட்டம் ஒழுங்கு ஆர்.சத்திவேல், கூடுதல் காவல் துணை ஆணையர் (CWC) எஸ்.வனிதா,ஆகியோர்கலந்து கொண்டனர்.

 மேலும், இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட சமூகநலஅலுவலர்.தமிமூன்நிஷா, திருச்சி மாநகர காவல் சட்ட ஆலோசகர்.ராதா, மகளிர் திட்ட உதவி அலுவலர் .ஜான்பால்ஆண்டனி, தொழிலாளர்துறை ஆய்வாளர். லெட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் டாக்டர் அனிதா, குழந்தைகள் நல குழு தலைவர் கமலா, அரசு வரவேற்பு துறைஅலுவலர்ஆல்பர்ட் மனோகரன்,மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியளித்தனர். 


பயிற்சியில் பங்குபெற்ற அனைத்துகாவல் ஆளிநர்களும் முனைப்புடன் பயிற்சி பெற்று சிறப்பாக பணிபுரிய இப்பயிற்சி உதவியாகஇருந்ததாக தெரிவித்தார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்மீதுகடுமையானசட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form