இருசக்கர வாகன திருடர்கள் பிடிபட்டனர்

 இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது


06 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்திருச்சி மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டு வரும்திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி

தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.இந்நிலையில் இன்று 11.07.2021-ந் தேதி காலை 10.00 மணிக்கு உறையூர்குற்ற தனிப்படையினர் புத்தூர் நால்ரோடு அருகில் வாகன தணிக்கை பணியில்ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் போலீசாரைகண்டதும் தப்பிக்க முயன்றுள்ளனர் தப்பிக்க முயன்றவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள்


முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார்கள் மேலும் விசாரித்தபோதுதனதுபெயர் 1.ராஜா 32/21 த/பெ ராஜீ எண்-24, அண்ணாநகர், செந்தண்ணீர்புரம், திருச்சிஇரண்டாவது நபர்.ஆண்டவன்@ நல்லாண்டவர் 34/21 எண்-13A, காந்திபுரம், தில்லைநகர்,திருச்சி எனதெரிவித்துள்ளார்கள். 


மேலும் அவர்கள் உறையூர், அரசுமருத்துவமனை, கண்டோன்மென்ட், கே.கே.நகர்ஆகிய காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் 06 இருசக்கர வாகனங்கள் திருடியதைஒப்புக்கொண்டார்கள். மேற்படி எதிரிகளை உறையூர் குற்ற காவல் உதவிஆய்வாளர் கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.2,00,000/- மதிப்புள்ள06 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் எதிரிகளை நீதிமன்ற காவலுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்


மேற்படி இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்து,அவர்களிடமிருந்து ரூ.2,00,000/- மதிப்புள்ள 06 இருசக்கர வாகனங்களைகைப்பற்றிய உறையூர் குற்ற தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர்அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form