ஊரடங்கு தளர்வு காரணமாக இன்று முதல் திருச்சியில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் ஆலயம், மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி, சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில், உள்ளிட்ட திருச்சியில் உள்ள அனைத்து கோயில்களும்
இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அதைபோல் திருச்சியில் உள்ள மரியன்னை பேராலயம், சகாய மாதா பசிலிக்கா, மெயின்கார்டு கேட் லூர்து அன்னை ஆலயம், புத்தூர் பாத்திமா மாதா கோயில், கேகே நகர் ஜெகன்மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்கள் இன்று காலை முதல் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் கலந்து கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல நத்தர்ஷா தர்கா இன்று முதல் திறக்கப்பட்டது. வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்
மேலும் தர்ஹாவிற்க்கு வழிபாட்டுக்கு வரும் நபர்களுக்கு கிருமிநாசினி பயன்படுத்தியும் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளி கடைபிடித்துவரும் படி நிர்வாகத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டது மேலும் அனைத்து பள்ளிவாசல்களும் இன்று திறக்கப்பட்டு தொழுகை நடைபெற்றது.