ஜூலை.20.
விவசாயி பொதுமக்கள் மோதல் சூழல் தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக சங்க விவசாயிகள் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தலைமையில்
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து திருச்சிரப்பள்ளி ஜங்சன் ரயில்நிலையம் வரை விவசாயிகள் நடைபயணமாக சென்று அங்குயிருந்து ரயில் மூலம் டெல்லி செல்ல முயற்சி செய்தனர்
இதை அறிந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிருத்தினர் உடனே விவசாயிகள் சாலைமறியலில் ஈடுப்பட்னர் அப்போது விவாசயில் ஒருவர் தான் அணிந்திருந்த ஆடைகளை கழட்டி நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டர்
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகம் சுளித்தனர் பொது இடத்தில் ஆடையின்றி இருந்த அந்த நபரை காவல்துறையினர் எச்சரித்து கைது செய்தனர்
மேலும் விவசாயிகள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வெகுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் இருசக்கர வாகன ஓட்டி ஒரு ஒருவர் கோபமடைந்து விவசாயிகளிடம் நான்மருத்துவமனைக்கு செல்லேண்டும் நான் டாக்டர் எனக்கு வழி விடுங்கள் என்று கேட்டார்
அப்போது வழிவிட முடியாது என வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் அளவிற்குபிரச்சினை ஆரம்பித்தது இதை அறிந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது
காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் பதற்றம் தனிக்கப்பட்டது இச்சம்பவம் காவல் துறையின் அனுமதியின்றி நடைபெற்றதால் பதற்றம் ஏற்பட்டது