அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஏங்கே எனது தடுப்பூசி? கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஒன்றிய மோடி அரசே !
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான 14 கோடி தடுப்பூசிகளை உடனே வழங்கு
தடுப்பூசி உற்பத்தியை பொதுத்துறை நிறுவனங்களில் போர்க்கால அடிப்படையில் உடனே தொடங்கிடு!
உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கி அவர்கள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்து!
காலதாமதமின்றி செங்கல்பட்டு HLL தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடு!
தடுப்பூசி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு பாகுபாடு காட்டாதே!
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கே எனது தடுப்பூசி ?" என்ற முழக்கத்துடன் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் ,திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் இராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் A.K.திராவிடமணி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரை ஆற்றினார். AIBEA திருச்சி மாவட்ட செயலாளர் G. ராமராஜ் நிறைவு கண்டன உரை ஆற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்ட தலைவர் R.முருகேசன், AISF மாவட்ட செயலாளர் K.இப்ராகிம், AIYF மாவட்ட குழு உறுப்பினர்கள் R.கௌதம், K.முருகன், S.B.ராஜா முஹம்மது , B.ரகுராமன், ஆனந்தன், ஏர்போர்ட் ராஜா, R.தவ்சீஃப், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். முடிவில் AIYF மாவட்ட குழு உறுப்பினர் S.B.ராஜா முஹம்மது நன்றியுரை கூறினார்.
.