குப்பை குழியாக மாறிய பாதாளசாக்கடை
திருச்சி தென்னூர் பகுதி 51வார்டு. முளைக் கொள்ளை தெருவில் உள்ள பாதாளசாக்கடையில்குப்பைகள் நிரம்பி அடைந்துள்ளதால் கழிவுநீர் செல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது இதனால் அருகில் குடியிருப்பவர்கள்
மாநகராட்சிக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது மேலும் கொரோனாநோய் தொற்று காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு மலேரியா போன்ற வியாதிகள் பரவும் என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது
உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

