முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பாக முட்டிபோட்டு ஆர்ப்பாட்டம்
திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தலைமை தாங்கினார் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரபிக்ராஜா, மாநில அமைப்பு செயலாளர் குழுமூர் முகமது அலி, திருப்பூர் மாவட்ட தலைவர் ஷாகுல்அமீது, செயலாளர் அப்துல் வஹாப், விழுப்புரம் மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் ரேஷன் பொருட்களை எடை குறைவாக போடும் ரேஷன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கர்நாடகத்தில் மேகதாது அணையை கட்டி தமிழக மக்கள் வாழ்வதற்கு இடையூறு செய்யும் கர்நாடக அரசைக் கண்டித்தும்.
தமிழக சிறையில் 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லீம்களையும் ராஜீவ்காந்தி, கொலைக் குற்றத்தில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,உதவிட வலியுறுத்தியும்
கோயில் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரணம் ரூ.4.ஆயிரம் மற்றும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கியது போல பள்ளிவாசல் இமாம்கள் மோதினார்களுக்கும் வழங்கக் கோரியும் முட்டிபோட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இதில் மாநில பொருளாளர் ஹனீப்,மாநில இளைஞரணி தலைவர் சாதிக்கான், மாநில அமைப்புச் செயலாளர் சையது இப்ரஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் முகமதுபாரீத்,திருச்சி மாவட்ட தலைவர் அரப்ஜான், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர்ஷெரீப்,மாநகர் மாவட்ட பொருளாளர் முபின்,மாநில இளைஞரணி செயலாளர் நஜீருதீன் திருச்சி மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜமால், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் மன்னான், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் முஸ்தபா,மற்றும் பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநகர இளைஞரணி செயலாளர் முனிருதீன், நன்றி கூறினார்