தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி காவல்துறை ஆணையரிடம் மனு
ஷேக் அகமது, தலைமையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதில்
சென்னை துறைமுகம் பகுதி மண்ணடியில் அமைந்துள்ள பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமையாக செயல்பட்டு வந்த அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பேனரை மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அத்துமீறி நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர் இது சம்பந்தமாக துறைமுகம் உதவி ஆணையர் கோடிலிங்கம், என்பவரிடமும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தும் போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை மேலும் அலுவலகத்தை தாக்க வந்தவர்களை கட்டுப்படுத்தாமல் வேண்டும் என்றே அலுவலகம் வரை அனுமதித்து தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட காரணமாய் இருந்தார்கள் என்பதை வெளிவந்துள்ள வீடியோக்கள் மூலம் அறிந்து கொண்டோம் மேலும் தாக்கியவர்கள் மீதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை உதவி ஆணையர் கோடிலிங்கத்தின் இந்த நடவடிக்கை தமிழக அரசின் நற்பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயலாற்றி இருப்பதாக எண்ணுகிறோம் தமுமுக அலுவலகத்தை சூரையாடியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்பட காரணமாய் இருந்த துறைமுகம் காவல் உதவி ஆணையர் லிங்கத்தின், மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் திருச்சி மாவட்ட தமுமுக சார்பாக மனு அளித்ததாக தெரிவித்தனர்