திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் தேசிய வாழை ஆராய்ச்சி இயக்குனர் உமா, செய்தியாளர்களிடம் கூறுகையில்
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் உள்ள 104 ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்க்கு முதல் இடம் கிடைத்துள்ளது
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு “சர்தார் பட்டேல்” என்ற சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நீண்ட ஆராய்ச்சி பணியில் வாழை மேம்பாடு, உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் அறுவடை பின் சார் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் வாழை ஆராய்ச்சி மையம் சிறப்பாக பணியாற்றியது
கடந்த ஐந்து ஆண்டுகளில் திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையத்தின் பல்வேறு ஆய்வுகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது
பாரம் பரிய வாழைக்காக திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஜீன் வங்கி போல் ஆசியாவில் வேறு எங்கும் இல்லை.
15 முதல் 20 ரூபாய்க்கு கிடைக்கும் வாழை கன்றுகளை 5ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஒரு மனிதனுக்கு தேவையான வைட்டமின், இரும்பு போன்ற சத்துக்கள் ஒரு வாழைப்பழத்தின் மூலம் கிடைக்கும் வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
ஏற்றுமதியை மூன்று மடங்கு அதிகரிக்கவும் செய்துள்ளார்கள் – தேனி வாழை யூரோப் வரை சென்றுள்ளது.
300 மில்லியன் வாழை கன்றுகளை வேளாண்மை செய்ய நாங்கள் வழங்கி உள்ளோம்.
சர்க்கரை நோயாளிகள் என்றாலே வாழைப்பழம் சாப்பிட கூடாது என்கிறார்கள் ஆனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வாழைப்பழம் கூட உள்ளது, இது தொடர்பாக ஆய்வு செய்யுது வருகிறோம்
பள்ளி குழந்தைகளுக்கு (மதிய உணவில் ) வாழைப்பழம் வழங்க வேண்டும் அதை போல் உலர் வாழையை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.