முசிறியில் சாலை விபத்து பெண் தமிழாசிரியர் பலி.

 முசிறியில் சாலை விபத்து பெண் தமிழாசிரியர் அம்பிகா பலி.





திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலை விபத்தில் பெண் தமிழாசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


முசிறி புதிய பேருந்து நிலையம் பகுதியில் வசிப்பவர் சுதேஷ். இவரது மனைவி அம்பிகா 53 சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்


.


மாற்றுத்திறனாளியான இவர் தனது மூன்று சக்கர வாகனத்தில் முசிறி துறையூர் ரோட்டில் அயித்தாம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லோடு வேன் மோதியது. இதில் தமிழ் ஆசிரியை அம்பிகா படுகாயமடைந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்


.சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் அம்பிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்து லோடு ஆட்டோ டிரைவர் பெருமாளிடம் விசாரணை மேற்


கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Post a Comment

Previous Post Next Post

Contact Form