முசிறி அருகே அய்யம்பாளையத்தில் காவிரி ஆற்றில் குளித்த போது வாலிபர் நீரில் மூழ்கி பலி.
திருச்சி மாவட்டம்முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம்காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முசிறி அருகே உள்ள நாச்சம்பட்டி கருப்பு கோவில் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி.கூலித்தொழிலாளி. இவரது மகன் வேலாயுதம் (17),அய்யம்பாளையம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்
. அய்யம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மூன்று நண்பர்களுடன் குளிப்பதற்காக வேலாயுதம் சென்றுள்ளார்.
வேலாயுதத்தின் நண்பர்கள் குளித்துவிட்டு கரையேறிய போது தங்களுடன் நண்பர் வேலாயுதம் இல்லாததை உணர்ந்துள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினர் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் காவிரி ஆற்றில் நீண்ட நேரம் தேடி வேலாயுதத்தின் உடலை சடலமாக மீட்டனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலாயுதத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


