திருச்சியில் இரு பங்குதாரர்கள் மோதல் கத்தி குத்து
திருச்சி;
பங்கு தொகையை தர மறுத்த பங்குதாரரை மற்றொரு பங்குதாரர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே. நகர் ராஜாராம் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவர் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து தங்கம் மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருவதாகம். இவரிடம் திருச்சி தென்னூர் ஸ்டீல் தோப்பு பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் என்பவரும் பங்குதாரராக சேர்ந்து இந்த தொழிலை செய்து வந்துள்ளார் என்றும் இப்ராஹிம் இந்த தொழிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வருகிறார். இவரிடம் சலாவுதீன் கடந்த 6 மாதமாக பங்குதாரராக உள்ளார். சலாவுதீன் 20 பேரிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாயை வசூல் செய்து இந்த தொழிலில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நீண்ட நாட்களாக பங்குதாரர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும்.பங்கு தொகையை கொடுக்காமல் இப்ராஹிம் இழுத்தடித்து உள்ளார். இந்நிலையில் சலாவுதீன் இடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளனர். இந்நிலையில் பங்கு தொகையை திரும்ப கேட்பது தொடர்பாக தென்னூரில் கடந்த 11ம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் இருவருக்கும் இடையே கைகலப்பு உருவானது. இதில் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சலாவுதீன் கத்தியால்
இப்ராஹீமை குத்தியாதகவும் உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் சமாதானப் படுத்தி காயமடைந்த இப்ராஹிம், என்பவரை திருச்சி தென்னூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளர் இதுகுறித்து இப்ராஹிம் தந்தை முகமது ரபிக் தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்