தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை

 திருச்சி பாலக்கரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார், மாநில துணைச் செயலாளர். வி.எம்.பாரூக் கருத்துரை வழங்கினார்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்

தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அரசிற்கு பாராட்டு.



நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் தமிழ்நாடு முதலமைச்சராக பொருப்பேற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. 


கொரோனா தொற்று அசாதாரண சூழ்நிலையில் பொருப்பேற்ற நாள் முதல் மக்களின் துயர் துடைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீறிய வழிகாட்டுதலில் அரும்பணிகளாற்றி வரும்  மாண்புமிகு அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், முன் களப்

பணியாளர்கள் உள்ளிட்ட வர்களுக்கு இக்கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றது.


ஆம்புலன்ஸ் சேவை தொடங்குதல்.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டம் சார்பாக  பொது மக்கள் மருத்துவ அவசர தேவைக்கு ஏற்ற வகையில் ஆம்புலன்ஸ் சேவையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டம் சார்பாக  - மாருதி Eco ( ரூபாய். 835000 ) என்ற வாகனம் விரைவில் வாங்கப்படும்.

இத் தொகை அனைத்து தப்பினரிடமிருந்து வசூலிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம்  வாங்கப்படும்  என்று இக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது


கொரோண நிவாரணப் பணிகள்.


கொரோணா கடுமையான சமூக பரவல் உள்ள சூழ்நிலையில் மக்கள் பொருளாதார சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர

வேண்டும் என்று தலைமையின் ஆணைக்கிணங்க

திருச்சி தெற்கு மாவட்டம் 

சார்பாக மக்களுக்கு மளிகை பொருட்கள், மருத்துவ சேவை போன்றவைகளை துரிதமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. 


இதற்கு பொருளாதார ரீதியாக மனமுவந்து உதவிய அனைத்து நல்லுலங்களுக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.


 சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்திடுக.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெறும் 7 பேர்களையும் விடுவிப்பதற்காக தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது பாராட்டுக்குறியது.மேலும் 10 ஆண்டுகளுக்கு 


மேலாக   சிறையில் வாடி வரும் முஸ்லிம்களை பாரபட்சமின்றி விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


மத்திய அரசுக்கு கண்டனம்.


கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொல்லைப்புற வழியாக 5 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய பாஜக மோடி மத்திய அரசை 

இக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு. மூன்று மாநிலங்களில் 13 மாவட்டங்களில் வசிக்கும் அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 

மே 28 உத்தரவை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு தொடுத்துள்ளதை இக் செயற்குழு கூட்டம் வரவேற்கிறது.


முஸ்லிம்களின் இறை வணக்க பள்ளிவாசலில் உள்ள உலமாக்களுக்கும், பள்ளிவாசலின் மோதினார்களுக்கும் வாழ்வாதாரம் காக்க COVID19 நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்க வேண்டும் என  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்களை  செயற்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


தமிழக அரசிற்கு கோரிக்கை.

கொரோனா பெறுந்தொற்று காலத்தில் பல அமைப்புகள்,  இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் தன்னார்வலர்களாக செயல்படுகின்றனர்.

இவர்கள் கொரோனா தொற்றில் உயிர் இறந்தவர்களை தன் உயிர் பாராது அவர்களை அடக்கம் செய்தல், தொற்று உள்ளவர்களுக்கு எல்லா விதமான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

தன்னார்வலர்கள் ஊரடங்கு காலத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் உள்ளனர். 

எனவே தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவித்து தன்னார்வலர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையும் , குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்க வேண்டும் என இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


திருச்சி மாநகராட்சிக்கு கோரிக்கை.


பாலக்கரை வாய்க்காலில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் கலந்து பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது.

இதனால் அப்பகுதியில் கொசு தொல்லை தின தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களுக்கு மிகவும் சிரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  

மக்கள் குளிப்பதற்கு ஒரு காலகட்டத்தில் பயன்படுத்தி வந்த இந்த வாய்க்காலின் நிலை கண்டு மக்கள் வேதனையடைந்துள்ளனர். 

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர் கால நடவடிக்கை மேற்கொண்டு வாய்க்காலை தூர்வார வேண்டும் என இக் கூட்டம் வலியுறுத்துகிறது.


 கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசிடம் மனமுவந்து உதவிசெய்த  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  புரவலர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்


அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவ அபுதாபி நோபல் மரைன் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர் ஷாஹுல்ஹமீது அவர்கள் 50லட்சம் மதிப்புள்ள 15.220 மெட்ரிக் டன் எடையுள்ள 330 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசின் SIPCOT நிறுவனத்திற்க்கு

வழங்கியுள்ளார்.


துபாய் பிளாக் துளிப் நிறுவனத்தின் உரிமையாளர் தஞ்சை நடுக்கடை யஹ்யா அவர்கள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆக்சிஜன் கூடம் அமைக்கும்  பணிகளை தொடங்க  ரூபாய் 1 கோடி நிதியூதவி வழங்கியுள்ளார்.


துபாய் பவர்ஹவுஸ் குழுமத்தின் உரிமையாளர் ராமநாதபுரம் வழுதூர் ஜாஹிர் உசேன் அவர்கள் தமிழக அரசுக்கு ரூ. 10 லட்சம் நிதி அளித்திருக்கிறார்.


மக்களின் உயிர் காக்க தமிழக அரசுக்கு உறுதுணையாக நின்று உதவிசெய்த   தொழிலதிபர்களுக்கும்,நிவாரண

நிதியுதவி செய்த அனைவருக்கும்  மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக 

தெரிவித்துக் கொள்கிறோம்.ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

இந்நிகழ்ச்சியில்.

மாநில மாணவரணி பொதுச் செயலாளர் அன்சர்அலி,

மாவட்ட துணைத் தலைவர் எச்.நூர் முஹம்மது, மாவட்ட துனைச் செயலாளர் எஸ்.சம்சுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜி.எச்.ஹக்கீம், மாவட்டப் பொருளாளர் 

எம்.சாதிக்குல் அமீன், மேற்கு தொகுதி அமைப்பாளர் கே.எம்.எஸ்.அப்துல் கபூர்,  43வது வார்டு செயலாளர் கே.எம்.கே.பை ஜூர் ரஹ்மான்,  எஸ்.டி.யூ.மாவட்ட துணைத் தலைவர் பி.அப்துல் சலாம், கிழக்கு தொகுதி துணை அமைப்பாளர்கள் எம்.எஸ்.அப்துல் கரீம், டி.கே.செளகத் அலி, மாணவர் அணி  மாவட்ட பிரதிநிதி எஸ்.யூசுப் மற்றும் பலர் கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form