துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.எ.இனிகோ இருதயராஜ்,
திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையம்சிந்தாமணி பூசாரி தெருவில் துப்புரவு பணியாளர்களுக்கென அரசு சார்ப்பாக கோட்ரஸ் கட்டி தரப்பட்டுள்ளது இதில் 36துப்புரவு பணியாளர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்
இந்தக் கோட்ரஸ்கட்டிடம் பழுது அடைந்து உள்ளதாகவும் மின் இணைப்புகள் கம்பிகள் பழுதடைந்து உள்ளதாகவும்இது சம்பந்தமாக பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் துப்புரவு பணியாளர்களுக்கென கட்டிக் கொடுக்கப்பட்ட சமுதாய கூடத்தை மாநகராட்சி அதிகாரிகள் பழைய சாமான்கள் போட்டு வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்து உள்ளனர்
இங்கு உள்ள குடியிருப்பு வாசிகள் சமுதாய கூடத்தை பயன்படுத்த தர கோரி கேட்டதற்க்கு மாநகராட்சி நிர்வாகிகள் மறுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது
பல வருடங்களாக இது போன்ற சூழ்நிலையில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் முந்தைய ஆட்சியின்போது எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் மேலும் அப்பகுதி மக்களுடன் இணைத்து
தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் இது சம்பந்தமாக அடிப்படை வசதிகள் கேட்டு உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ்,ஆகியோரை சந்தித்து புகார் கொடுத்துள்ளனர்
புகார் கொடுக்கப்பட்ட
சிறிது நேரத்திலே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து நேரில் வந்து பார்க்கிறேன் எனவும் உறுதிமொழி அளித்துள்ளார்
15/6/2021. மனு கொடுத்தஅன்றே மதியம் மனுவிற்க்கு உடனேஅன்று மாலை மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று கோட்ரஸில் குடியிருக்கும் துப்புரவு பணியாளர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் சென்று குறைகளை கேட்டறிந்தார் அதன்பின் அருகில் உள்ள சமுதாயக்கூடத்திற்க்கு சென்று பார்வையிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு சாமான்கள் கம்பிகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி சமுதாய கூடத்திற்கு பயன்படுத்த வேண்டும் எனமாநகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தார்
இதில் மாநகராட்சி அதிகாரிகள் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரமணா, மாவட்ட கொள்கை பரப்புசெயலாளர்ஆதிஅரசு, காங்கிரஸ் கட்சி விக்டர் மற்றும் சீதர் செல்வராஜ் பாக்கியராஜ் வினோத் காளிமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.