அதிமுக சார்பு அணி செயலாளர்கள் கூட்டம்நடைபெற்றது
திருச்சியில் அதிமுகதிருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மாவட்ட ஒன்றிய பகுதிநகர பேரூர் கழக செயலாளர்கள் சார்பு அணி செயலாளர்கள் கூட்டம் தில்லைநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
இந்த கூட்டம்
அவைத் தலைவர். பிரின்ஸ்தங்கவேல், தலைமையில் நடைபெற்றது
முன்னாள் அமைச்சரும் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான மு.பரஞ்ஜோதி,
சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
32 ஆண்டுகளாக கழகத்தில் சாதனைபடைத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா,தமிழக அரசியலில் வரலாறு படைத்தவர்,அவர்கள் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி,
ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை
சிறப்பாக வழி நடத்தி வரும் வேளையில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சசிகலாவின் கபட நாடகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்
2.திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் சீரங்கம் முசிறி மனச்சநல்லூர் துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வாக்காளர்களுக்கு மற்றும் தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்
3.அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர்எடப்பாடி கே பழனிச்சாமியை,
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தும் ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி துணைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்து
கழக வழிகாட்டு குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி. கொரடாவாகவும் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரவி, துணை கொரடாவாகவும்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜுவை,
பொருளாளராகவும்
தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கேபி.அன்பழகன், செயலாளராகவும்.
கழக வழிகாட்டு குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச் மனோஜ் பாண்டியன், துணைச் செயலாளராகவும்
ஆகியோரை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நன்றிகூறினர்
4 கொரோனநோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கும் பொழுது கொரோனாநோய் தொற்றால் இறந்தார்கள் என்று குறிப்பிடப்படுவதில்லை மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்கள் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்
இதனால் மத்திய மாநில அரசு அறிவிக்கும் நலத்திட்ட உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது எனவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அறிவுரையின்படி இறந்தவர்களின் இறப்பு சான்றிதழை உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்
5.ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் வடக்கு ஒன்றியத்தில் பெட்டவாய்த்தலை பலங்கவேரிகிராமத்தில் 2011ம் ஆண்டு நிறுவப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா,
பிறந்தநாள் விழா கல்வெட்டை
மர்ம நபர்கள் இடித்து நொறுக்கி விட்டனர் இந்த செயலை வன்மையாக இக்கூட்டம் கண்டிக்கிறது கல்வெட்டு இடித்தவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது
இந்த கூட்டத்தில் முன்னாள்
அமைச்சர்கள் வளர்மதி,
கு.ப.கிருஷ்ணன், கேகே
பாலசுப்ரமணியன், அண்ணாவி,
பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர்கள் பரமேஸ்வரி,
செல்வராஜ், முன்னாள் மாவட்ட
செயலாளர் சுப்பு மற்றும் அனைத்து
ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள்,
பகுதி செயலாளர்கள் கலந்து
கொண்டனர்.