திருச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்
திருச்சி மாநகராட்சி இடமலைப்பட்டிபுதூர் உள்ள மாநகராட்சிஉயர் நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது பள்ளியின் வகுப்பறைகளை பார்வையிட்டார். வகுப்பு ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் முறைகளை கேட்டறிந்தார். தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் பற்றி ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறினார்.
புதிய மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கினார். பள்ளி பாடபுத்தகங்களும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் அரசு பள்ளிகளில் ஆர்வமாக சேர வந்துள்ளதையும் கேட்டறிந்தார் இதில் கட்சி நிர்வாகிகள் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் உடன் இருந்தனர்