பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

 தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்


ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் அரியமங்கலம் ரிலையன்ஸ் பங்க் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



இதில் மக்களின் குரலை காது கொடுத்துகேட்காத ஒன்றிய அரசை கண்டித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டடு.தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய பாஜக அரசு மக்கள் விரோத போக்கை கைவிடக் கோரியும்அத்திவாசிய பொருட்களின் மீது போடப்பட்ட வரி குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா,மக்கள் அதிகாரம் ஆனந்த் ஒருங்கிணைப்பாளர் ராஜா,  தரைக்கடை தொழிலாளர் சங்கம் தலைவர் ரபீக, செயலாளர் சுப்பிரமணி வெல்ஃபேர் பார்ட்டி தொழிற்சங்கம் தலைவர் சாகுல்மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form