திருச்சி காந்தி மார்க்கெட்திறக்க கோரி பாஜக வினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கொரோன நோய் தொற்று காரணமாக பூட்டப்பட்டிருந்த திருச்சி காந்தி மார்க்கெட் திறக்க கோரியும்சில்லறை வணிக வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரியும்
திருச்சி பாலக்கரை அரியமங்கலம் கோட்டம் மாநகராட்சி அலுவலகம் முன்புபாரதிய ஜனதா கட்சி வர்த்தக அணி பிரிவு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தில் கொரோனா நோய்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மார்க்கெட் திறந்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்
ஆனால் திருச்சி மாவட்டத்தில் நோய்த்தொற்று குறைந்த நிலையிலும் மாவட்ட நிர்வாகம் மார்க்கெட்டை திறக்க அனுமதி தராமல் மறுக்கின்றது இதனால் பல ஆயிரம் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் காந்தி மார்க்கெட் திறக்க வேண்டும் எனக்கோரி வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளர் சுவேந்திரன் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு மாநில செயலாளர் எம்.பி.முரளிதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பின்பு தோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணனிடம் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன், மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன், இளைஞரணி தலைவர் வெங்கடேசன், வர்த்தக பிரிவு மண்டலத் தலைவர் கணேசன். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர்கள் ராஜ்குமார், சரவணன், வெங்கடேசன், பாலக்கரை மண்டலச் செயலாளர் மல்லி செல்வம், திருஞானம், சந்தோஷ், சந்திரசேகர், அஜய்கோகுல், உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்