ரூ. 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் வழங்கினார்.
திருவெறும்பூர் ஜூன் 4
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணைக்கிணங்க ஏழை,எளிய மக்கள் 500 பேருக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்களை திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பனையக்குறிச்சி, சர்க்கார்பாளையம், கீழ முல்லைக்குடி பகுதி ஏழை எளிய, மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 500 பேருக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என். சேகரன், ம நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.