திருச்சியைச் சேர்ந்த ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் சார்பில் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள100ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், பிஸ்கட், சேமியா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கரோனா நோய்நோய் தொற்று காரணமாக வேலை இழந்து வறுமையில் வாடும் 100ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி பருப்பு சர்க்கரை என்னை பிஸ்கட் சேமியா ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் தினேஷ்பாபு, காவல்துறை உதவி ஆய்வாளர் மதியழகன், தர்கா ஜமாத் தலைவர் ஜாகீர் உசேன், என்டிஎஃப் மாநிலச் செயலாளர் ஆல்பா நசீர், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இலியாஸ், ஆசிரியர் காஜாமைதீன், எஸ்டிபிஐ முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் இப்ராஹிம், தலைவர் முகமது ரசூல், பொருளாளர் சாகுல் ஹமீது, அறங்காவலர்கள் சையது முஸ்தபா, அப்துல்லா, பாஸ்கர், ஜோ ஆகியோர் செய்திருந்தனர்.