திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டைக்கு விரைவில் ரோப்கார் வசதி.
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின். கூறியபடி திருச்சி மலைகோட்டைக்கு ரோப்கார் வசதி ஏற்பாடு செய்வது சம்மந்தமாகஆய்வு செய்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ,
கூறுகையில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் திருச்சியின் நீண்டநாள் கோரிக்கையான ரோப்கார் திட்டத்திற்கான ஆய்வு பணியை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இந்தத் ரோப் கார் திட்டத்தை விரைவாக செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.
திருச்சிக்கு வருகைதரும் பலர் பார்க்க விரும்பும் மலைக் கோட்டை மேல் நடந்து செல்ல முடியாமல் சிறமப்படுகின்றனர் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் குறிப்பாக வயதானவர்கள் வெளிநாட்டினர் பெரும் பயன் அடைவார்கள் திருச்சிக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரிக்கவும் வாய்புகள் அமையும்என்பது குறிப்பிடதக்கது
இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அன்பில் மகேஷ்பொய்யாமொழி,
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன்,அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து,சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, உட்பட பலர் உடனிருந்தனர்