தடுப்பூசி போடும்போது மயக்கம் வந்தால்

 திருச்சியில் தடுப்பூசி போடும் பணி துவங்கியது 


திருச்சி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வரப்பெற்றதைத் தொடர்ந்து 18 வயது முதல் 44 வயதுடைய நபர்களுக்கும் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி திருச்சி மாநகராட்சியின் 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஊரக  பகுதிகளிலும் 14  மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 


இதனை தொடர்ந்து இன்று ஜூன் 12 முதல் திருச்சி பொன்மலை, அரியமங்கலம், கோட்டம் கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகங்கள் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. 


திருச்சி பாலக்கரை அரியமங்கலம் மாநகராட்சி கோட்டம் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பொழுது ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி போட்டு சில நிமிடத்தில் மயக்கம் ஏற்பட்டது.


மருத்துவர்கள் உடனே அந்த பெண்ணை சமமான நிலையில் படுக்க வைத்து கால்களை உயர்த்தி பிடித்து இரத்த ஓட்டம்தலைப் பகுதிக்கு செல்வது போல் பிடித்துக் கொண்டனர் சில நொடிகளில்அப்பெண் இயல்பு நிலைக்கு திரும்பினார் தடுப்பூசி செலுத்திய உடனேஉடலில் உள்ள ரத்தஓட்டத்தின் வேகம் சில நொடிகள் குறைவதால் இதுபோன்று மயக்க நிலை ஏற்படும் எனவே தடுப்பூசி செலுத்தியவுடன் வேகமாக எழுந்துவிடாமல் மெல்லமாக காலை ஊன்றிய நிலையில் எழுந்து நிற்க வேண்டும்பிறகு சிறிதுநேரம் அமர்ந்து செல்ல வேண்டும் இது போன்று மயக்கம் வரும் நிலையில் சமமான நிலையில் படுத்து காலை உயர்த்தும்போது ரத்த ஓட்டம் தலைப்பகுதிக்கு சென்று சீரான நிலை ஏற்பட்டுவிடும்மேலும் சிலர் உணவு உட்கொள்ளாமல் அதிகாலையிலிருந்து  வரிசையில் வந்து  தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற மயக்க நிலை வரும் வெயிலின் தாக்கத்தால் பசியின் காரணமாகவும் ஏற்படுவது இயல்பு என மருத்துவர்தெரிவித்தனர்

மேலும்திருச்சி பாலக்கரை அரியமங்கலம் கோட்டத்தில் இன்று காலை முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள்ஆர்வமாக வரிசையில் நின்றிருந்தனர்


கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பிறகு காவல்துறையினர் கூட்டத்தினரை சரி செய்து அனைவரையும் வரிசைப்படுத்தி அனுப்பினர்

1 Comments

Previous Post Next Post

Contact Form