திருச்சியில்தமிழக முதல்வர் ஆய்வு

 தமிழகத்தில் பல்வேறு பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஆய்வு செய்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக தற்போது மழை காலம்தொடங்க உள்ளதால் ஆறு குளம் ஏரிகள் என தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன 


இந்நிலையில் திருச்சிக்கு வந்த தமிழக முதல்வர்அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 

திருச்சி மண்டலம்சிறப்பு தூர்வாரும் பணிகள் 2021-2022டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிக்காக திருச்சி மண்டலத்தில் 589 பணிகளுக்கு 6290.50தமிழக அரசு ஆணை (2D)எண்: 57, பொதுப்பணித்(W2) துறை, நாள்: 17.05.2021-ல் காவிரிஇலட்சத்திற்கும், சென்னை மண்டலத்தில் 58 பணிகளுக்கு ரூ.220.00 இலட்சத்திற்கும் நிர்வாகஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் மூலம் ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களிலுள்ள காவிரி டெல்டா பகுதியில் உள்ளஆறுகள், ஓடைகள், வாய்க்கால்கள், பிரிவு வாய்க்கால்களில் உள்ள தூர் மற்றும் முட்செடிகள் அகற்றிதூர்வாருவதன் மூலம் தண்ணீர் கடைமடை வரை எளிதாக சென்று பாசனம் செய்ய வழிவகைசெய்யப்பட்டுள்ளது. 


இத்திட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை, திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின்கட்டுப்பாட்டின்கீழ் பாசன ஆதாரங்களில் திருச்சி மாவட்டத்திலுள்ள 20 பணிகளுக்கு ரூ.177.30இலட்சம் மதிப்பீட்டில் 66.11 கிமீ தூரம் வரை தூர்வார வழிவகை செய்யப்பட்டுள்ளது.


உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கைகளில் திருச்சிமாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொடியாலம் மற்றும் புலிவலம் கிராமம், புலிவலம் மணற்போக்கியிருந்துசெல்லும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவேண்டும் என்று முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மேற்படி கோரிக்கையான வடிகால் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலைகிராமம், காவிரி ஆற்றிலிருந்து பிரியும் உய்யக்கொண்டான் வாய்க்காலின் இடதுகரை மைல் 9/5-6ல்மணற்போக்கி அமைந்துள்ளது. இம்மணற்போக்கி மூலம் செல்லும் வடிகால் வாய்க்காலானது புலிவலம்கிராமத்தில் ஆரம்பமாகி கொடிங்கால் வடிகாலில் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. இவ்வடிகால் வாய்க்கால் தூர் அடைந்தும், மண்மேடுகளிட்டும், செடிகொடிகள் வளர்ந்தும் நீரோட்டத்திற்குதடையாக காணப்பட்டது. இதனால் மழை மற்றும் வெள்ளக்காலங்களில் வரும் கூடுதல் நீரினால்நீரோட்டம் தடையேற்பட்டு அப்பகுதி பாசன நிலங்கள் மற்றும் கிராம பகுதிகள் மிகவும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை இருந்தன...

எனவே விவசாயிகளின் கோரிக்கையின்படி மேற்படி புலிவலம் மணற்போக்கி வடிகால்வாய்க்கால் LS 100மீ முதல் 1200மீ வரை தூர்வாரும் பணிக்கு ரூ.29.70 இலட்சம் மூன்று பணிகளுக்குநிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிதியின்கீழ் தற்போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பணியின் மூலம் கொடியாலம் மற்றும் புலிவலம் கிராம விவசாயிகள் அனைவரும்பயன்பெறுவார்கள். என தெரிவித்தனர்

இந்த ஆய்வின் போது  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு,நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு,கிழக்கு சட்டமன்ற உறுப்பினர.இனிகோ இருதயராஜ், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர். பழனியாண்டி, மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அதிகாரிகள் உட்பட பலர்கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form