இரண்டு பெருநாளும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழும் பெருநாள் கபூர் பள்ளிவாசல் இமாம் பேட்டி,
தியாகத் திருநாளாம் ஈத் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்நாளில் நபி இப்ராஹிம் தியாகத்தை நினைவு கூறும் வகையில் குர்பானி கொடுத்து அன்பை வெளிப்படுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது,
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாரிஸ் பாலம் அருகே உள்ள கபூர் பள்ளிவாசல் சார்பில் இன்று பெருநாள் தொழுகை பள்ளியின் நிர்வாகியும் தொழில் அதிபருமான பிரைட் ஹமீது தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு
பள்ளிவாசல் இமாம் முஹம்மது மைதீன் பெருநாள் தொழுகையை தொழுகை வைத்து நிறைவேற்றினார்,
தொழுகை முடிந்து நாட்டின் அமைதிக்காகவும் நோய் நொடியேற்றி அனைவரும் வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது,
மேலும் பள்ளி வாசல் இமாம் கூறுகையில் .இஸ்லாத்தில் இரண்டு பெருநாள் உள்ளது ஒன்று ஈதுல் ஹல்ஹா. ஈதுல் பித்ஃரு அதில் ஈதுல் பித்ஃரு.என்பது ரம்ஜான் இந்த பெருநாளில் தொழுகைக்கு முன்பாக ஏழைகளுக்கு தான தர்மங்கள்.செய்து விட்டு தொழுகை தொழ வேண்டும்.ஈதுல் ஹல்ஹா.இந்த பெருநாள் தொழுகையை முடித்து விட்டு பிறகு இறைவனுக்காக பிராணியை அறுத்து ஏழை மக்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும் ஆக இந்த இரண்டு பெருநாள்களும் ஏழை எளிய மக்கள் மகிழ்வதற்காகவே இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த பெருநாள் தொழுகையில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்கள் குழந்தைகள் என குடும்பத்துடன் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்