முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 



திருச்சி ஜூன், 30:                                  திருச்சி MIET பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. MIET கல்வி நிறுவன தலைவர் முகமது யூனுஸ் விழா தலைமை ஏற்று முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 

வளரும் புதிய பொறியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றலின் மதிப்பை வலியுறுத்தி வளர்ச்சி மனப்பாண்மையை தழுவி புதிய தொழில் முனைவோர்களாக வரவேண்டுமென்று ஊக்குவித்தார். 

முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் நமது கல்லூரியில் பயிலும் இன்றைய மாணவர்களுக்கு தாங்கள் பணி புரியும் நிறுவனங்களுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கல்லூரி துணைத்தலைவர் அப்துல் ஜலீல் தனது சிறப்புரையில் மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் புதிய தொழில் முறை வளர்ச்சியை பின்பற்றி உலக தரத்தில் சிறந்த இடமாக மாற்ற முன்னாள் மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்பட வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

கல்லூரியின் முதல்வர் நவீன் சேட் தனது வாழ்த்துரையில் கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களின் ஈடுபாடு அளவற்றது. ஒரு கல்லூரி சிறந்து விளங்க வேண்டுமென்றால், முன்னாள் மாணவர்களின் பங்கு மிகவும் அவசியமானது என்றார்.

விழாவில் முன்னாள் மாணவர்கள் தங்களுடைய மாணவர் பருவத்தில் ஆசிரியர்கள் வழிகாட்டுதல், கல்லூரி விதிமுறைகள் எங்கள் சமுதாயத்தில் சான்றோராக மாற்றியதற்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் கல்லூரியின் வளர்ச்சியை ஈடுபடுத்திக் கொள்கிறோம் என்றனர். மேலும், மாணவர் பருவத்தில் இருந்து பசுமையான கல்லூரி நினைவுகளை பகிர்ந்தனர். தற்போது பயந்து வரும் இன்றைய மாணாக்கர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களின் தேவையை கற்றுக் கொண்டு தொழில்முனைவோராக ஆகவேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் 137 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு அளவற்ற மகிழ்ச்சியோடு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாகக் கட்டிடவியல் துறை பேராசிரியர் சந்தோஷ் குமார் நன்றி உரை வழங்கினார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form