பாகிஸ்தான் மீது போர் தொடு நாடகம் ஆடாதே மத்திய பாஜக அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் பகல் காமில் 26 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்வும் ,திருச்சி மாநகரில் சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைக்கோடு அடிக்க வேண்டும், எனவும் மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும்,பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோரியும் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி தென்னூர் அரசமரம் பஸ் ஸ்டாப் அருகில் திருச்சி மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
அதில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 26க்கும் மேற்பட்டஅப்பாவிகள் உயிரிழந்த உள்ளனர்.
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் தெரிவித்தாலும் இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பாகிஸ்தான் மீது போர் தொடுப்போம் எனமத்திய பாஜக அரசு கூறிவந்த நிலையில் இதுவரை போர் தொடுக்காதது ஏன் உடனடியாக போர் தொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் .
திருச்சியில் சாலையில் உள்ள வேகத் தடைகள் மீது வெள்ளை நிர கோடுகள் அடிக்கவும்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பக்ருதீன், மாநில அமைப்பு செயலாளர் சல்மான் பக்கீர், மாநில உலமா அணித் தலைவர் சரிப் ரப்பானி, மாநில இளைஞரணி தலைவர் முஸ்தபா, மாநில இளைஞரணி செயலாளர் முகமது காசிம், மாவட்ட தலைவர் அல்லா பிச்சை, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர், புறநகர் மாவட்ட செயலாளர் முகமது இக்பால், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் குத்புதீன், தலைமைக் கழகச் செயலாளர் சாதிக் கான், மாவட்ட தலைவர் ஜாகீர் கான், மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத், மாவட்ட துணை செயலாளர் ஹபிப் முகமது, மாவட்ட பொருளாளர் முகமது முஸ்தபா உசேன் ,மாவட்ட பொருளாளர் சபி மாநில செயற்குழு சுஜித் அலி, மாவட்ட துணை செயலாளர் முபின் மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துல்லா, மாநில செயற்குழு முன்னா, இளைஞரணி ஜவகர், ஜீவா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.