நீதிபதியிடம் வழக்கறிஞர் கோரிக்கை மனு அளித்தார்.
திருச்சி, டிச. 4: திருச்சி போர்ட் போலியோ மற்றும் உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் அவர்களை திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் மதுரையில் நேரில் சந்தித்து
திருச்சி நீதிமன்றத்திற்கு தேவையான கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த போது எடுத்த படம்.
கோரிக்கை: அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் போதைப் பொருள் மருந்துகள், மனநோய் பொருட்கள் சட்டம் சிறப்பு நீதிமன்றம் திருச்சியில் வேண்டுமென்று தற்சமயம் இவ் வழக்கு சம்பந்தமான சிறப்பு நீதிமன்றம் புதுக்கோட்டையில் உள்ளது.
கோரிக்கை 2. போக்சோ வழக்குகளுக்கு என்று தனி நீதிமன்றம் வேண்டும்
கோரிக்கை 3. காசோலை மோசடி வழக்குகளுக்கென்று தனி நடுவர் நீதிமன்றம் வேண்டும்.
கோரிக்கை 4 கூடுதலாக ஒரு குடும்ப நல நீதிமன்றம் வேண்டும்.
கோரிக்கை: தற்போது டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள மனித உரிமையியல் நீதிமன்றம் திருச்சி கோர்ட் நீதிமன்ற வளாகத்தில் வேண்டும்,
உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு நீதிபதி எம் எஸ் ரமேஷ் அவர்களிடம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்களால் கொடுக்கப்பட்டது.