சுற்றுச்சூழலைக் காக்க விதையுடன் கூடிய காகித எழுதுகோல் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய நாணயங்கள், பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள்!
திருச்சி, செப், 28: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன் அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியை திறந்து வைத்து ஜே.ஆர்.காயின்ஸ் ஜெம்ஸ் சாம்சன் செல்வகுமார் வழங்கிய காகிதப் பேனாவை பார்வையாளர்களுக்கு வழங்கி பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலைக் காப்போம் என்றார்.
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் விதையுடன் கூடிய காகித பேனா பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தால் மக்கிவிடும். இதன் சிறப்பம்சமாக காகித பேனா விதைகளுடன் இருப்பதுதான்.
காகித பேனா மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்படுவதுடன், அதில் இருக்கும் விதை மூலம் இயற்கை வளத்தையும் அதிகரிக்க முடியும் என்றனர்.