புதுச்சேரி அஞ்சல் தலை சேகரிப்பாளருக்கு பாரம்பரிய காவலர் விருது
திருச்சி, செப்.28; திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன் அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியை திறந்து வைத்து, இந்தோ பிரெஞ்ச் தபால் தலைகள் மற்றும் நாணயவியல் கழக நிறுவனர் ஜெயச்சந்திரன் நாணயங்கள்
அஞ்சல் தலை உள்ளிட்ட சேகரிப்பு கலையை அடிப்படையாகக் கொண்டு வரலாறு கலை, கலாச்சாரம், பண்பாடு பொருளாதாரம் குறித்து எடுத்துரைத்தமையை பாராட்டி பாரம்பரிய காவலர் விருதினை வழங்கினார்.