அரசு பள்ளியில் மேலாண்மை குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது,
சேலம், ஆகஸ்ட், 3: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி,காந்தி நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஆர் கவிதா ராஜா, தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணன் காந்திநகர் இரண்டாவது வார்டு செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்,
பள்ளி மேலாண்மை குழுவில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் பாதுகாப்பு,குழந்தைகளின் நன்னடத்தை,விளையாட்டுத் திறன்,நினைவாற்றல் பயிற்சி.பள்ளிமேலாண்மை குழு வளர்ச்சி ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலாண்மை குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்