தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி விஷ்வயுவ கேந்த்ரா மற்றும் கிராமியப் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடைபெற்றது
தொண்டு நிறுவனம் மேலாண்மை மற்றும் ஆதாரங்களை வளப்படுத்துவதற்கான பயிற்சி முகாம்
திருச்சியில் விஷ்வயுவ கேந்த்ரா மற்றும் கிராமியப் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து திருச்சி தமிழ்நாடு லைட்டி கமிஷனில் தொண்டு நிறுவனம் மேலாண்மை மற்றும் ஆதாரங்களை வளப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சியை சேவை கோவிந்தராஜ் தலைமை வகிக்க பத்மசிறீ சுப்புராயன் துவக்கி வைத்தார், கிராமிய நாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பயிற்சி நோக்கம் குறித்து டெல்லி விஷ்வ யுவகேந்திரா ரஜத் தாமஸ் நிகழ்த்த பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், அருட் தந்தை மரியமைக்கல் மற்றும் அண்ணாதுரை சிறப்புரை நிகழ்த்தினார்கள்
இறுதியாக அண்ணாதுரை நன்றி கூறினார் இந்த பயிற்சி மூலம் தற்போதைய சூழலில் சட்ட திட்டகளை கடைபிடித்து நடத்துவது குறித்தும் நிதி ஆதாரங்களை திரட்டுவது எப்படி என்பது விளக்கப்பட்டது.
இதில் அபி அறக்கட்டளை இயக்குனர் மருதநாயகம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.