அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளின் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

 மறைந்த குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டதுதிருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளின் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா .



மறைந்த குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் சார்பில் மாணவ மாணவிகளின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியானது திருவெறும்பூர் மாணிக்கம் நகரில் தொடங்கி நவல்பட்டு சாலை வழியாக சுமார் ஒன்றரை கி.மீ தூரம் கடந்து திருவெறும்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே நிறைவடைந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், சிறுவர், சிறுமியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்த திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form