பறவைகளுக்கு உணவும், குடிநீரும் வழங்கி வரும் தம்பதியர்!

Trending and Earningகோடை வெயில் கடும்தாக்கத்தில்பறவைகளுக்கு உணவும், குடிநீரும் வழங்கி வரும் தம்பதியர்!



 

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும் பசிப்பிணி போக்க அன்னதானமும் பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும் உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்து பணியையும் மேற்கொண்டு வருகின்றனர் அதில் கோடை கால கடும் வெப்ப தாக்கத்தில் பறவைகளுக்கு உணவும் குடிநீரும் வழங்கி வருகின்றனர்.

 இதுகுறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில் கோடை காலங்களில் நீர்நிலைகள் பற்றி குடிநீரின்றி பறவைகள் இடம்பெயரும் சூழல் உள்ளது. இயற்கை வளம் மற்றும் காடுகளை அழித்தல் மேலும் இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் பறவை இனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் பறவை இனங்களை வீடுகளில் கூண்டில் வைத்து அடைத்து வளர்ப்பது இயற்கைக்கு புறம்பான செயலாகும்.மண் வளத்தை அடியோடு அழிக்கும் விதமாக விளைநிலங்களில் எல்லாம் அளவுக்கு அதிகமாக ரசாயனங்களை பயன்படுத்துவதால் 12 % பறவைகள் தற்போது அழிவின் விளிம்பில் ஊசல் ஆடிக் கொண்டுக்கிறது என்று பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பறவைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் அனைத்து ஜீவராசிகளையும் அன்போடும், பண்போடும் ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் நேசிக்க வேண்டும். 

இந்தியாவில் மட்டும் 1330 அரிய வகையான பறவை இனங்களும் தமிழகத்தில் 52 வகையான பறவை இனங்கள் மட்டுமே உள்ளது என்று தேசிய பறவைகள் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் பறவைகள் அழிந்து வருவது கடும் வேதனையாக உள்ளது. கோடைக்காலத்தில் காட்டூத்தீக்கும் கடலில் மக்களின் அலட்சியத்தால் வீசி எறியும் கழிவுளை உண்டும் பறைவகள் அழிவது தொடர்கதையாகி வருகிறது. பறவை இனங்களும் தற்போது அழிந்து வருவதை நம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

 பெரும்பாண்மையான பறவை இனங்கள் மரத்தில் கூடுகட்டி இன்பமாக வாழ்பவை தன்னிச்சையாக அலைந்து திரிந்து தேடிய இறையை மகிழ்ச்சியோடு உண்ணுகின்ற பறவைகள் ஆகும்.



பறவை இனம் தான் உண்கின்ற பழத்தின் விதைகளை எல்லாம் எச்சமாக வேறு இடத்தில் போடுகின்றன. இதனால், மரங்கள் வளர்வதற்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கின்றது. சிட்டுக்குருவிகள் எல்லாம் அழிந்து கொண்டு வருகின்றது.அவற்றை பேணி பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். கோடைகாலத்தில் அதிக வறட்சி மற்றும் வெப்பம் நிலவுகிறது எனவே பறவை இனங்களைப் பாதுகாக்க வீடுகளின் முன்பு பறவைகளுக்கு குடி நீரும் உணவும் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form