டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,
திருச்சி, தர்மநாதபுரம் புனித அந்தோணியார் ஆலயம் அருகே கிறித்தவ அருந்தியர் உரிமை இயக்கம் சார்பில் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு கற்பி, ஒன்றுசேர்,புரட்சி செய் என்ற தலைப்பில் கல்வி கற்றல் விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது,
இதில்,திருச்சி மாவட்டம் தலைவர் ஞானசேகர், முன்னிலையில்
மாவட்ட செயலாளார் லூயிஸ் ஸ்டீபன்,அம்பேத்கர் உருவப்படத்தை திறந்து வைத்தார்,
அதைத்தொடர்ந்து அலெக்ஸாண்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
கண்மலை அறக்கட்டளை நிறுவனர் வில்பர்ட் எடிசன் சிறப்புரையாற்றினார
தமிழ் புலிகள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ரமணா வாழ்த்துரை வழங்கினார்,
அம்பேத்கரின் சாதனை வரலாறு மாநில பொதுச் செயலாளர் சவரி முத்து,தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சகாய சேகர்,மாநில மகளிர் அணி தலைவி பிரியா,ஆகியோர் கலந்து கொண்டு கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்
இதில் அப்பகுதி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்,