கந்துவட்டி நபர்கள் மீது நடவடிக்கை

 கொலை மிரட்டல் விடும் கந்துவட்டி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் எஸ் பி அலுவலகத்தில் இளம் பெண் புகார்.


திருச்சி, அக்.5:                                          திருச்சி வேலூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவர்  திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் வேங்கூர் முருக்கூர் பகுதியில் வசித்து வருபவர் சத்யா இவர் திருச்சி காட்டூர் அரியமங்கலம் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர்  கடந்த மார்ச் மாதம் கணவரின் மருத்துவ செலவிற்காக காட்டூர் வின் நகரில் வசிக்கும் பிச்சை மாணிக்கம் என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் அசலும் வட்டியும் சேர்த்து 1,30,000 செலுத்திய நிலையில் மீதமுள்ள 70 ஆயிரம் ரூபாயை உடனே வழங்க வேண்டும் எனவும், மேலும்  இதுவரை நீ கொடுத்த   


1,30,000 ரூபாய் வட்டி மட்டுமே எனவும், வட்டியும் முதலும் சேர்த்து 250000 ரூபாய் தர வேண்டும் எனக்கூறி பிச்சை மாணிக்கம் மற்றும் அவரது மகன்கள் இளமாறன் , இளங்கோவன் ஆகியோர் சேர்ந்து சத்யாவை மிரட்டி உள்ளனர். இதனையடுத்து சத்யா திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து இருந்தார். தொடர்ந்து காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தைக்கு அழைத்து இருந்து போது அங்கு வந்த பிச்சை மாணிக்கம் மற்றும் அவரது மகன்கள்  இளமாறன் , இளங்கோவன் மற்றும் மகள்கள் லட்சுமி , ஜெயந்தி  ஆகியோர் காவல் நிலையத்திலே தன்னை தாக்க முயற்சித்தாக கூறி சத்யா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form