பள்ளி மாணவ மாணவி களுக்கான இலவச நினைவாற்றல்

 அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ மாணவி களுக்கான இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.


திருச்சி, அக்.6:                                           அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் பாயிண்ட் அகாடமி சார்பில் இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம் திருச்சி சென் ஜேம்ஸ் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு பள்ளி தாளாளர் யுஜின் தலைமை தாங்கினார். அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் கெளரவ தலைவர் ஆர்.கே.ராஜா, தலைவர் முனைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‌ பனானா லீப் ரெஸ்டாரன்ட் நிர்வாக இயக்குனர் மனோகரன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.



முகாமில் கதிர் மருத்துவமனையும் எலும்பு மூட்டு முதுகு தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரத் குமார், பாரதிதாசன் யூனிவர்சிட்டி டிபார்ட்மென்ட் ஆஃப் உமன்ஸ் ஸ்டடீஸ் டைரக்டர் அண்ட் ஹெட் முனைவர் முருகேஸ்வரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த பயிற்சி முகாமில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் பயிற்சியை மைண்ட் மெமரி கோச் தமிழ்ச்செல்வன் வழங்கினார். முன்னதாக இந்த இலவச நினைவாற்றல் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட து.

இதில், மழைத்துளி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுச் செயலாளர் விவேக்உட்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form