இந்திய குடியரசு கட்சியில் இணைந்தனர்

 பல்வேறு கட்சியில் இருந்து 30 க்கும் மேற்பட்டவர்கள் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தனர்


திருச்சி, அக், 8:                                திருச்சியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு பணிகள் செய்து வருகின்றனர் குறிப்பாக முதியோர் உதவித்தொகை விதவைத் தொகை ஊனமுற்றோருக்கான தொகை உள்ளிட்ட அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெற்று தருகின்றனர்

இக்கட்சியின் பணிகளை கண்டு பாராட்டி பல்வேறு கட்சியைச் சார்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்  

மாற்று திரனாளிகளின் மாநில சங்க தலைவர் ஆரோக்கியராஜ், இந்திய குடியரசு கட்சியின் மகளிர் அணி மாவட்ட தலைவி சுந்தரி,கட்சி நிர்வாகிகள் சித்ரா, புவேனஸ்வரி, ஜெனிதா, மாணிக்கம், பூபதி ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கொண்டனர் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்,

மேலும் இந்திய குடியரசு கட்சியின் சட்ட திட்டங்கள் அக்கட்சியின் கொள்கைகள் பற்றி புதிய நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு  கட்சியின் கொள்கைகளை கூறினர்  

இந்நிகழ்வில் இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட ஆண்கள் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form